இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விராட் கோலியை தொடர்பில் மேலும் 2 வீரர்கள் விலக வாய்ப்பு இருக்கிறது
ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்ப உள்ள நிலையில், தற்போது இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் ஏற்கனவேயே காயத்தில் இருந்த இஷாந்த் ஷர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலக வாய்ப்பிருக்கிறது. ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தான் இஷாந்த் ஷர்மா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்தார்.
அதே நேரத்தில் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் பெரிதாக ஆடவில்லை. இருந்தாலும், இருவரும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இப்படியிருக்கையில் இஷாந்த் ஷர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இருவரும் சரியான நேரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர வேண்டும் அப்படி இல்லை என்றால் இருவரும் டெஸ்ட் தொடரின் இழக்க நேரிடும் என இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.