ஜடேஜா ,அஸ்வினை தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவும் பொற்போது இங்கிலாந்து கவுன்ட்டியில் ஆட போவதாக சமூக வலை தளங்களிலும் ஊடகங்களிலும் வந்த வன்ணம் உள்ளன.
Photo by Vipin Pawar – Sportzpics – IPL
ஆனால், தற்போது இசாந்த் அச்செய்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.அவர் வார்விக்சைர் அணிக்காக விளையாடுவார் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது,
நான் எந்த கவுன்ட்டி அணிக்காகவும் விளையாட அனுகப்படவில்லே. மேலும் கவுன்ட்டியில் ஆடும் விருப்பம் தற்போது இல்லை. இது போன்ற செய்திகள் எங்கிருந்து வருகிறது என எனக்கு தெரியவில்லை. இது போன்ற தவறான செய்திகளை எவ்வளவு நம்பகத்தன்மையும் இல்லாமல் எப்படி ஊடகங்களும் இணையதளங்களும் வெளியிடுகின்றன என்றும் தெரியவில்லை.
இந்திய அணியில் முக்கியத்துவம் வாய்ந்த பந்து வீச்சாளராக வளம் வந்தவர் இசாந்த் சர்மா வளம் வந்தார். ஜாகீர் கானின் ஓய்விற்குப் பிறகு இசாந்த் சர்மா ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.
கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி வரலாறு படைக்கும் விதமாக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம் இசாந்த் சர்மாவும் தான்.
இந்தியா இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளிலும் அபாரமாக இன்னிங்ஸ் வெற்றி இலங்கையை துவம்சம் செய்தது இந்தியா இலங்கை அணியை துவம்சம் செய்து வரலாறு படைத்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற வெற்றிக்கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த அணி தேர்வில் இசாந்த் சர்மாவும் இடம் பெற்றார். ஆனால் உமேஷ் யாதவ் மற்றும் முகமது சமி ஆகியோரின் அற்புதமான செயல்பாடுகள் அவரால் அணியில் இடம் பெறவில்லை.