31 வயதிலேயே ஓய்வினை பற்றி பேசிய இசாந்த் சர்மா! வெளிப்படையான அறிவிப்பு!

 

31 வயதிலேயே ஓய்வினை பற்றி பேசிய இசாந்த் சர்மா! வெளிப்படையான அறிவிப்பு!

 

இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆகியிருக்கிறார் இசாந்த் சர்மா. கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரிதாக விளையாட வில்லை என்றாலும் கிட்டத்தட்ட 98 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாtiயிருக்கிறார். கடந்த 13 வருடங்களாக விளையாடி வருகிறார் இந்திய அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளிலும், 80 ஒருநாள் போட்டிகளிலும் 14 டி20 போட்டிகளிலும் வந்து போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். தற்போதைய 31 ஒரு வயது தான் ஆகிறது. 17 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகம் ஆகி விட்டார்

தோனியின் தலைமையிலான அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக ஆடி இருந்தாலும் விராட் கோலி இவரை நிரந்தர டெஸ்ட் வீரராக மாற்றிவிட்டார். 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 297  விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் முப்பத்தி ஒரு வயது ஆகியிருக்கும் அவர் ஓய்வினை பற்றி பேசியிருக்கிறார். திடீரென்று தனது உடல் ஒத்துழைக்கும் வரை கிரிக்கெட் விளையாடுவேன் அதன் பின்னர் ஓய்வு பெற்று விடுவேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

 

என்னுடைய இளம் வயதிலேயே கிரிக்கெட் மீதான ஈடுபாட்டை அறிந்து கொண்டுதான் விளையாடத் தொடங்கினேன். எப்போது ஆடுகளத்திற்கு சென்றாலும் 100 சதவீத உடல் தகுதியுடன் தான் செல்வேன். ஒவ்வொரு நாளும் என்னை நான் மேம் படுத்திக் கொள்ளவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை ஒலிக்கச் செய்ய வேண்டும் மேலும் எனது உடல் எத்தனை ஆண்டுகாலம் ஒத்துழைக்கிறதோ எத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். சமந்தா தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு விளையாட ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்.

தற்போது வரை 297 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 300 விக்கெட்டுகள் வீழ்த்தி விட்டால் இதனை செய்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய வீரராக மாறுவார். கபில்தேவ் மற்றும் ஜாகிர் கான் ஆகிய இருவர்தான் 300 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Mohamed:

This website uses cookies.