மீண்டும் களத்திற்கு வந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்! ஆஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை !

இரண்டு வருடங்கள் கழித்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட போகிறது. டெஸ்ட் டி20 ஒருநாள் என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடவதற்காக தற்போது தயாராகி வருகிறது.

இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணிற்கு சென்று விளையாடியபோது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது. 70 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு இந்த வெற்றி கிடைத்தது.

இந்த அணியில் இஷாந்த் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை தற்போது காயம் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். வெகு சீக்கிரத்தில் இந்த காயம் சரியாகிவிடும் அதன் பின்னர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று கூறப்பட்டது இந்நிலையில் காயம் கிட்டத்தட்ட சரியாகி விட்டதால் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறார் இஷாந்த் சர்மா

இந்த பயிற்சி வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இஷாந்த் சர்மா இந்திய அணியில் இடம் பெற்று விட்டதால் அணியின் பந்து வீச்சில் சற்று வலிமை பெற்று விட்டது. இது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை

இந்திய – ஆஸ்திரேலிய தொட்ருக்கான முழு அட்டவணை

1 வது ஒருநாள்: சிட்னி (நவ. 27)

2 வது ஒருநாள்: சிட்னி (நவ. 29)

3 வது ஒருநாள்: கான்பெர்ரா (டிச. 2)

1 வது டி 20: கான்பெர்ரா (டிசம்பர் 4)

2 வது டி 20: சிட்னி (டிசம்பர் 6)

3 வது டி 20: சிட்னி (டிசம்பர் 8)

1 வது டெஸ்ட்: அடிலெய்ட் (டிசம்பர் 17-21)

2 வது டெஸ்ட்: மெல்போர்ன் (டிசம்பர் 26-30)

3 வது டெஸ்ட்: சிட்னி (ஜன. 7-11, 2021)

4 வது டெஸ்ட்: பிரிஸ்பேன் (ஜன. 15-19)

Prabhu Soundar:

This website uses cookies.