வீடியோ: கடப்பாரை அணின்னா சும்மாவா… ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை மிரட்டல்… ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்…!

எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை இஸ்சி வாங் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல்முறையாக நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் தொடரில், லீக் சுற்றுகள் முடிவடைந்து டெல்லி கேப்பிட்டல் பெண்கள் அணி, மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி, யுபி வாரியர்ஸ் பெண்கள் அணி ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதிபெறும். அடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு தகுதி பெறும். மற்றொரு அணி வெளியேற்றப்படும். இப்படியாக பிளே-ஆப் சுற்றுகள் நடத்தப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததால் நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் யுபி வாரியர்ஸ் அணி மோதின. டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெடுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நெட் சைவர்-பிரட் 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார்.

சற்று கடினமான இலக்கை சேஸ் செய்த யுபி வாரியர்ஸ் அணிக்கு 56 ரன்களுக்கு விக்கெட்டுகள் பறிபோயின. இதனால் அந்த அணி சற்று தடுமாறி வந்தது. அணியின் நட்சத்திர வீராங்கனை கிரண் நாவிக்ரே மற்றும் தீப்தி ஷர்மா இருவரும் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விடாமல் விளையாடி வந்தனர்.

அதுவரை மிகச்சிறப்பாக பந்துவீசி வந்து இஸ்சி வாங், போட்டியின் 13வது ஓவரை வீசினார். சிறப்பாக விளையாடி வந்த கிரண் விக்கெட்டை அந்த ஓவரின் 2வது பந்தில் வாங் வீழ்த்தினார். கிரண் 27 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார். அடுத்ததாக வந்த சிம்ரன் மற்றும் எக்லேஸ்டோன் ஆகியோர் விக்கெட்டை 3வது மற்றும் 4வது பந்துகளில் போல்டு செய்து எடுத்ததன் மூலம், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார் இஸ்சி வாங்.

அதன் பிறகு யுபி வாரியர்ஸ் அணிக்கு வரிசையாக விக்கெடுகள் சரிந்து மொத்த அணியும் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அபாரமாக பந்தவீசிய இஸ்சி வாங் 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஹாட்ரிக் விக்கெட் வீடியோ:

 

Mohamed:

This website uses cookies.