இந்திய வீரர்கள் அனைவரும் ஜூன் மூன்றாம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் தற்போது இங்கிலாந்தில் தனிமையில் உள்ளனர். தனிமை காலம் முடிந்தவுடன் சில பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டு வருகிற 18-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இங்கிலாந்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நடத்தக் கூடாது. அதற்கு பதிலாக மூன்று போட்டி நடத்தப்பட்டு, அந்த மூன்று போட்டிகளில் எந்த அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறுகிறதோ அந்த அணியே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற அணியாக அறிவிக்கவேண்டும் என்று ரவி சாஸ்திரி
கூறியிருக்கிறார்.
ரவி சாஸ்திரி கூறியதை தற்போது யுவராஜ் சிங் மேற்கோள் காட்டி, அவர் கூறுவது மிக சரி. நிச்சயமாக மூன்று போட்டிகள் நடத்தப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்பு
தற்பொழுது நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. எனவே நிறைய நாட்கள் அவர்கள் விளையாடி விட்டு நேராக இந்தியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள். ஆனால் மறுபக்கம் இந்திய அணி கடந்த மூன்று மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்களுக்கு போதிய பயிற்சி கிடைக்கப் போவதுமில்லை. எனவே இதனை வைத்து பார்க்கையில் நிச்சயமாக இந்திய அணியை விட நியூஸிலாந்து அணி நல்ல டச்சில் இருக்கும். இது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார்.
மூன்று போட்டிகளாக நடந்து இருந்திருக்க வேண்டும்
இதனை தவிர்க்கும் பட்சத்தில் நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மூன்று போட்டிகளாக நடத்தப்பட்டு இருந்திருக்க வேண்டும். எனினும், இந்திய அணி நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக கடந்த 5 ஆண்டுகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுவது வழக்கமாகிவிட்டது.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் தற்போது மிக சிறப்பாக இருக்கிறது. நிச்சயமாக இந்திய அணியின் வீரர்கள் முடிந்தவரை இறுதிப்போட்டியில் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற ஜூன் 18-ம் தேதி துவங்கப்பட்டு ஜூன் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டனில் நடைபெற உள்ளது.இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.