எங்கள் காயம் இன்னும் ஆறவில்லை! இந்த முறை அது நடக்காது! கடுப்பில் துடிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்!

எங்கள் காயம் இன்னும் ஆறவில்லை! இந்த முறை அது நடக்காது! கடுப்பில் துடிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்!

2018 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வந்து டெஸ்ட் தொடரை வென்றது தங்களுக்கு மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த காயம் தற்போது வரவில்லை என்றும் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது வரும் டிசம்பர்  27 ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கப் போகிறது. இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.. அப்போது 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று வரலாற்று சிறப்பு மிக்க வகையில் கோப்பையை கைப்பற்றியது

இதுவரை இந்திய அணி 75 வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை கைப்பற்றியது கிடையாது. அதாவது டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது கிடையாது. இந்த வெற்றி இந்தியாவிற்கு எவ்வளவு சிறப்பாக இருந்ததோ, அந்த அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது குறித்து தற்போது பேசி இருக்கிறார் அந்த அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன்.

தற்போது எங்களது அணி ஒரு சிறந்த அணியாக இருக்கிறது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இருப்பதற்காக நாம் இதனைக் கூறவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை வளர்த்துக்  விட்டார்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பல இளம் வீரர்கள் திறமையை வளர்த்து சர்வதேச அரங்கில் ஜொலிக்க தயாராகி விட்டார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு இந்திய அணி இந்தியாவில் வென்றது காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது எங்களுக்கு இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்.

Prabhu Soundar:

This website uses cookies.