பென்ஸ் ஸ்டோக்ஸ் பேட்டிங் அணுகுமுறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக எடுபடாது. எதற்காக இத்தனை கோடி கொடுத்து அவரை எடுத்தார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக அகமதாபாத் மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.
கட்ந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி, சுமார் 16.25 கோடி கொடுத்து பென் ஸ்டோக்ஸ்-ஐ எடுத்தது. இவரை எடுத்ததற்கு ரசிகர்கள் பலர் மிகவும் கொண்டாடினர். ஏனெனில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட கூடியவர். போட்டியை தனி ஆளாக நின்று ஜெயித்துக் கொடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.
மேலும் தோனிக்கு இந்த ஐபிஎல் சீசன் தான் கடைசி என்கிற பேச்சுக்கள் அடிபடுகின்றன. அவர் போனபிறகு கேப்டன் பொறுப்பிற்கு சேயான ஆளாக பென் ஸ்டோக்ஸ் இருப்பார் என்பதால், இத்தகைய கொண்டாட்டம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்பட்டதற்கு பலேயும் கொண்டாடி வந்தாலும், சிஎஸ்கே அணி முட்டாள்தனம் செய்து விட்டனர். இத்தனை கோடிக்கு பென் ஸ்டோக்ஸ் சரியானவர் அல்ல. மேலும் சென்னை மைதானத்தில் இவரது பேட்டிங் எடுபடுவது சந்தேகம் தான் என்று அதிர்ச்சிகரமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
“பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அனைத்து மைதானங்களிலும் சிறப்பாக செயல்படுவாரா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் அவரது பேட்டிங் அணுகுமுறையில் ஆரம்பத்தில் சில நேரங்கள் எடுத்துக்கொண்ட பிறகே, தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு எந்த அளவிற்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
அத்துடன் அவருக்கு காலில் பிரச்சனை இருக்கிறது. அவரால் முழு சீசனும் பந்துவீச முடியாது. இந்த வகையிலும் சிஎஸ்கே அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது. பேட்டிங் பௌலிங் இரண்டிலும் இவர் சரிப்பட்டு வருவாரா என்பது சந்தேகமாக இருக்கும் நிலையில், இத்தனை கோடி கொடுத்து எடுத்தது சரியான முடிவா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏன் சிஎஸ்கே அணி நிர்வாகம் இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்தார்கள் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆல்ரவுண்டராக செயல்பட முடியாமல் அணியில் இவரை வைத்திருப்பதும் சரியாக வராது.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.