நல்லவேளை நான் அந்த தப்பை பண்ண தெரிஞ்சேன்; ஹர்திக் பாண்டியா வசமா சிக்கிட்டாரு – பேட்டியில் சொன்ன நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்!

இந்த மைதானத்தை சரியாக கணிக்காமல், ஹர்திக் பாண்டியா செய்த தவறை நானும் செய்வதாக இருந்தேன், ஆனால் தப்பித்து விட்டேன் என பேசியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர்.

ஜனவரி 27ஆம் தேதி ராஞ்சி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பின் ஆலன்(35) மற்றும் டெவான் கான்வே(52) இருவரும் நியூசிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஓவர்களில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் நன்றாக ஆதிக்கம் செலுத்தினர்.

இன்னிங்சின் கடைசி ஓவர் வரை நின்று, கடைசி ஓவரில் 27 ரன்கள் அடித்துக் கொடுத்து ஆட்டத்தின் போக்கையே நியூசிலாந்து பக்கம் திருப்பினார் டேரல் மிட்ச்சல். இவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 59 ரன்கள் அடித்திருந்தார்.

6 விக்கெட் இழந்த நியூசிலாந்து அணி, 176 ரன்கள் 20 ஓவர்கள் முடிவில் எடுத்திருந்தது. இந்த மைதானத்தில் 177 ரன்கள் சேஸ் செய்வது சற்று கடினம் என்றாலும் நம்பிக்கையுடன் களம் இறங்கியது இந்திய அணி.

இந்தியாவிற்கு நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். 15 ஓவர்களில் ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

360 டிகிரி சூரியகுமார் யாதவ் உள்ளே வந்தவுடன்  எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். இவர் 47 ரன்கள் அடித்திருந்தபோது துரதிஷ்டவசமாக இஸ் சோதி பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் சென்ற அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவும் 21 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, இந்திய அணி சரிவை நோக்கி சென்றது.

ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் நியூசிலாந்து பவுலர்களை பொளந்து கட்டினார் வாஷிங்டன் சுந்தர். இவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்த பின்னர் ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 155 ரன்கள் எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் 1-0  என்ற கணத்தில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர், போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த போது மைதானத்தையும், டாஸில் தோல்வியடைந்தது சாதகமாக அமைந்ததையும் பற்றி பேசினார் அவர் கூறியதாவது:

“இரண்டாவது இன்னிங்ஸில் இப்படி பந்து ஸ்பின் ஆவது அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் இந்த போட்டியை மிகச் சிறப்பாக அமைந்தது. ஒரு நாள் போட்டிகளில் நிறைய ரன்களை பார்த்தோம். இப்போது நிறைய ஸ்பின் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாகத்தான் பவர்-பிளை ஓவர்களிலேயே ஸ்பின்னர்களை இறக்கினேன். டேரல் மிட்ச்சல் கடைசிவரை நின்று நன்றாக விளையாடினார்.

180 ரன்கள் எட்டினால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று எதிர்பார்த்தேன். கிட்டத்தட்ட அதை எட்டி விட்டோம். இந்த மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிந்து கொண்டு, டாஸ் வென்றால் நிச்சயம் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவுடன் வந்தேன். ஆனாலும் முதலில் பேட்டிங் களமிறங்கியது சேலஞ்சாக இருந்தது. அதே நேரம் பவர்-பிளே ஓவர்களில் பந்து நன்றாக ஸ்பின் ஆகும் என அறிந்து கொண்டு முதலிலேயே ஸ்பின்னர் இறக்கியதால், அவர்கள் வேலையை எளிதாக்கிவிட்டனர்.” என்று பேசினார்.

ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது என்கிற பாணியில் பேசினார்.

Mohamed:

This website uses cookies.