செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான சுற்றுபயணத்தை நிறுத்தியது கவலை அளிக்கிறது என்று அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து அணி அச்சுறுத்தலின் காரணமாக விளையாடாமல் புறக்கணித்தது, இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அடுத்த நாளே நியூசிலாந்து அணி தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வழியனுப்பி வைத்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை கைவிட்டதது, இதை பாகிஸ்தான் அணியின் புதிய பிரசிடன்டாக தேர்வுசெய்யப்பட்ட ரமீஷ் ராஜா பாகிஸ்தான் அணிக்கு இது மிகுந்த மனச்சோர்வை அளித்துள்ளது, என்று தெரிவித்தார் மேலும் கேன் வில்லியம்சன் செய்தது மிகப்பெரும் வெட்கக்கேடு என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை கைவிட்டது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தோம் ஆனால் அப்படி முடியாமல் போனது உண்மையில் வருத்தமான ஒரு விஷயம்தான் என்று கேன் வில்லியம்சன் பேசினார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மிக பிரமாதமாக விளையாடியது என்று பாகிஸ்தான் அணி பாராட்டினார் மேலும் தற்பொழுது தன்னுடைய முழு கவனம் எல்லாம் இந்த உலகக் கோப்பை தொடரின் மீதுதான் உள்ளது என்றும் கேன் வில்லியம்சன் தெரிவித்திருந்தார்.
நியூசிலாந்து அணி தனது பயிற்சி ஆட்டத்தின் போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.