தோத்துட்டோம்னு நெனச்சி இந்திய அணி விளையாடி இருக்காங்க; வெளிப்படையாக பேசிய சுனில் கவாஸ்கர் !!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

குயின்டன் டி காக், டுப்லஸ்ஸிஸ் போன்ற அனுபவ வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியில் இல்லாததால் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை இழந்து இருக்கிறது.

இந்த தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தான் என்று ஒருபுறம் தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் இந்திய அணியின் திட்டம் சரியாக இல்லை என்று சிலர் தங்களது குற்றச்சாட்டினை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஷர்துல் தாகூர் மற்றும் பும்ரா ஆகிய இரு பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், தென்ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில் மதிய உணவிற்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஷர்டுள் தகூர் ஆகிய இரண்டு நட்சத்திர பந்துவீச்சாளர்களுக்கு ஏன் இந்திய அணி பந்து வீசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது இன்னும் விடை தெரியாத பதிலாகவே உள்ளது, ஒருவேளை இந்திய அணி தான் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை உறுதி செய்து விட்டது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதே போன்று அஸ்வின் பந்துவீசுகையில் இந்திய அணியின் பீல்டிங் செட்டப் சரியாக இல்லை, இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் எளிதாக ரன்களை அடிக்க முடிந்தது என்றும் இந்திய அணி செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

மேலும் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டு தென்ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களை சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.