இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே பெற்று 5 போட்டிகளில் தோல்வி பெற்றது. அதனால் டேவிட் வார்னர் தலைமையில் பிரச்சினை உள்ளதாக கருதி அவரை அணியில் இருந்து தூக்கி உட்கார வைத்தனர்.
மேலும் டேவிட் வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்தனர். பல்வேறு ரசிகர்கள் கேன் வில்லியம்சன் தான் டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கி விட்டதாக கூறி வந்தனர். ஆனால் தற்பொழுது அது குறித்து ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சபாஷ் நதீம்விளக்கம் அளித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மேனேஜ்மென்ட் தான் முறுக்கு காரணம்
டேவிட் வார்னர் அணியில் இடம்பெறாததற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் மட்டும் தான் காரணம் என்று கூறியுள்ளார். ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி, தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ், துணை பயிற்சியாளர் பிராட் ஹாடின் மற்றும் மெண்டர் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் இணைந்து டேவிட் வார்னரை தலைமை பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் கேன் வில்லியம்சன் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்றும் அவரும் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்றும் கூறியுள்ளார். எனவே இதில் எந்தவித தவறும் கூற முடியாது என்றும், அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறது அதுதான் இறுதி என்றும் கூறி முடித்தார்.
நிச்சயமாக வாய்ப்பு கிடைத்தால் மீதமுள்ள போட்டிகளில் நான் விளையாடுவேன்
சபாஷ் நதீம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாடினார். இந்த ஆண்டை தவிர்த்து இதற்கு முந்தைய கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட அவர் மொத்தமாகவே 10 போட்டிகளில் மட்டும் தான் விளையாடி உள்ளார். பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள நதீமுக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
இது குறித்து பேசிய அவர், அணியில் தற்பொழுது அபிஷேக் சர்மா, முகமது நபி மற்றும் சுஜித் போன்ற வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். எப்பொழுதும் வாய்ப்பு எடுத்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. முடிந்தவரை நாம் எப்பொழுதும் பாசிட்டிவாக இருக்கவேண்டும் என்றும், எப்பொழுது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது நம்முடைய முழு திறமையை காண்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றால் நிச்சயமாக நான் விளையாட ஆவலாக உள்ளேன். அணி என்னை நம்பி மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் என்னுடைய முழு திறமையை காண்பிக்க நான் தயார் என்றும் கூறியுள்ளார்.