2008 முதல் தற்போது வரை இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சிஎஸ்கே அணி 3 முறையும் கோப்பைகளை தட்டிச் சென்றுள்ளது. இந்தாண்டு நடைபெறும் 14வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9 முதல் மே 30 வரை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்தாண்டு எந்தொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று கூறியுள்ளனர். ஏப்ரல் 9 நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் எந்தொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று பிசிசிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இந்நிலையில், சி எஸ் கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் பிசிசிஐயின் இந்த முடிவு சரியில்லை என்று எதிரிப்பு தெறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் சென்னை அணி வான்கடே மைதானத்தில் விளையாடுவதும் மும்பை அணி சேப்பாக்கம் மைதானத்திலும் விளையாடுவது வேடிக்கையாக உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர், ரகானே, பிரித்வி ஷா ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடினாலும் மும்பையைச் சேர்ந்த அவர்களுக்கு வான்கடே மைதானம் ஹோம் மைதானமாகும்.
பஞ்சாப் அணியில் வாளையாடும் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலுக்கு சின்னச்சாமி மைதானம் ஹோமாக இருக்கிறது. அப்ப இவர்களுக்கெல்லாம் அது ஹோம் மைதானம் கிடையாதா என்று கேள்வி எழுப்பினார்.
தோனிக்கு இந்தாண்டு கடைசி ஐபிஎல் போட்டியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தால் தோனிக்கு மற்ற மைதானத்தில் ஃபேர்வெல் செய்து சிறப்பிக்க முடியாது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஃபேர்வெல் செய்தால் தான் நல்லா இருக்கும். ஒருவேளை மற்ற மைதானத்தில் நடத்தினால் இதனை ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே இதுகுறித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.