சிஎஸ்கே அணி ஒரு தனித்துவமான அணி; மனதை திறக்கும் பார்த்தீவ் பட்டேல்

2021 கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது இந்நிலையில் அனைத்து அணி வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர் இந்நிலையில் சென்னை அணியும் தங்களது வீரர்களை தயார்படுத்திக் கொண்டுள்ளது.

கடந்தாண்டு துபாய் அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை குறிப்பாக எந்த வருடமும் இல்லாத அளவிற்கு சென்னை அணி மிக மோசமாக விளையாடி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கூட இறந்தது இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் சீனியர் வீரர்கள் தான் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அணி குறித்து முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பார்த்திவ் படேல் கூறியதாவது சென்னை அணி ஒரு மிக சிறந்த அணியாகும், சென்னை அணியின் கேப்டன் தல தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன் ஆவார், சென்னை அணி எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தான் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று நம்பும் ஒரு பலமான அணியாக இதனால் சென்னை அணி ஒரு அற்புதமான தொடக்கத்தை நிச்சயம் கொடுக்கும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது சென்னை அணியில் முக்கிய வீரராக திகழ்ந்த சுரேஷ் சரினா மீண்டும் அணிக்கு திரும்பியது அந்த அணியின் மிடில் ஆர்டரில் மிகப் பெரும் பலத்தை அதிகரித்துள்ளது.மேலும் சமீப காலமாக உள்நாட்டுப் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ருத்ராஜ் கடைசியாக சென்னை அணிக்கு விளையான்ட 3 போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தினார். நிச்சயமாக இவர்களது பேட்டிங் சிஎஸ்கே அணி ஒரு பலம்வாய்ந்த பேட்டிங் ஆர்டரை உருவாக்கும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது சென்னை அணி சமீபத்தில் சென்னையில் நடந்த ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் இந்திய அணி வீரரான கிருஷ்ணப்ப கௌதம் ஆகிய இருவரையும் தங்களது அணிக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டது, இதனால் சென்னை அணி ஒரு வலுவான அணியாக உருவெடுத்துள்ளது என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.பார்ட்டி பட்டேல் முதல் மூன்று சீசன்களில் சென்னை அணிக்கு விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.