பும்ராஹ் கேப்டன் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார்; காரணத்துடன் விளக்கிய ரவி சாஸ்திரி!!

இந்திய அணியின் கேப்டனாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருப்பது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மூன்றுவித போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்த பிறகு, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு யார் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என்ற கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. ரோஹித் சர்மாவிற்கு ஏற்கனவே லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டதால் கூடுதலாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதனால் சிலர் கேஎல் ராகுலை கேப்டன் ஆக்குங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்,
ஆனால் கேஎல் ராகுல் தனது கேப்டன் பொறுப்பில் இன்னும் போதிய அனுபவம் பெறவில்லை. 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்தாலும், இந்திய அணியில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியை தோல்வியை நோக்கி எடுத்துச் சென்றுவிட்டார். அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் அணியை வழிநடத்த கூடிய திறமை படைத்த வேறு யாராவது ஒருவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ராவிடம் டெஸ்ட் தொடர் கேப்டனாக இருப்பது குறித்து கேட்கும்பொழுது கேப்டன் பதவி கிடைத்தால் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பும்ராவின் இந்த பதில் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது.

இந்த நிலையில் பும்ராவின் இந்த கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு ஆல்ரவுண்டர் திறமையும் இருக்க வேண்டும், பந்துவீச்சாளராக இருந்தாலும் மைதானத்தில் எப்பொழுதும் ஆக்ரோஷமாகவே இருக்க வேண்டும் இதனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியை வழிநடத்துவது என்பது மிகவும் கடினம். கபில்தேவ், இம்ரான் போன்று ஒரு ஆல்ரவுண்டராக இருந்தால் அணியை வழி நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.