ஆப்கனின் வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறப்புமிக்கது – கேப்டன் ரகானே

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுக டெஸ்ட் போட்டி ஆகும். அந்த அணி டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற 12-வது அணி ஆகும்.

இப்போட்டிக்கு இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். போட்டி குறித்து ரகானே கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானின் அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த போட்டி அவர்களுக்கு வரலாற்று தருணம் ஆகும். இதில் நாங்கள் பங்கேற்று விளையாடுவது அற்புதமானது. ஆப்கானிஸ்தான் சிறந்த அணியாகும். சில திறமை வாய்ந்த வீரர்கள் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

“They have a fine team and some talented players, who have proved themselves in shorter formats. I am sure they are looking forward to do the same in Test cricket. On behalf of the Indian team, I wish them all the best.”

அந்த உத்வேகத்தை டெஸ்ட் போட்டியிலும் தொடருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் கூறியதாவது:-

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது எங்களுக்கு சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கவுரமாகும்.

HARARE, ZIMBABWE – MARCH 25: The victorious Afghanistan team after winning The ICC Cricket World Cup Qualifier Final between The West Indies and Afghanistan at The Harare Sports Club on March 25, 2018 in Harare, Zimbabwe. (Photo by Julian Herbert-IDI/IDI via Getty Images)

இதில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது பெருமை வாய்ந்தது.

எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். தனிப்பட்ட முறையிலும் அதேவேளையில் ஒரு அணியாகவும் திறமையை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்

ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே (கேப்டன்), 2. தவான், 3. முரளி விஜய், 4. லோகேஷ் ராகுல், 5. புஜாரா, 6. கருண் நாயர், 7. சகா (விக்கெட் கீப்பர்), 8. அஸ்வின், 9. ஜடேஜா, 10. குல்தீப் யாதவ், 11. உமேஷ் யாதவ், 12. முகமது ஷமி, 13. ஹர்திக் பாண்டியா, 14. இசாந்த் சர்மா, 15. சர்துல் தாகூர்.

Editor:

This website uses cookies.