மீண்டும் கேப்டனாக ஆகவேண்டும் ஆர்வத்தில் ஸ்டீவ் ஸ்மித்; காரணம் இதுதான்!!

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான் கேப்டனாக விரும்புவதாகத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பால் டம்பரிங் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஒன்பது ஆண்டுகள் எந்த ஒரு போட்டியிலும் விளையாட கூடாது என்று தடை விதிக்கப்பட்டனர்.அதன்பின் சர்வதேச போட்டிகளில் பங்காற்றிய இரு வீரர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். இருந்தபோதும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஷிப் பண்ணுவது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக டிம் பெய்ன் உள்ளார்.

சமீபமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது,இந்திய அணியின் சீன வீரர்கள் பலரும் இல்லாத நிலையிலும் இந்திய அணி இளம் வீரர் கள் படையைக் கொண்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது.இதன் மூலம் பெரிதும் பாராட்டப்பட்ட வந்த இந்திய அணி அதனைத் தொடர்ந்து நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

தனது சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது அந்த நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அந்த அணி கிரிக்கெட் வல்லுநர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது, இதன் காரணமாக அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்ததாவது, நான் பலமுறை யோசித்து பார்த்தேன் நான் நினைக்கிறேன் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எது தேவையோ அதன்மீது எனக்கு இப்பொழுது ஆர்வம் அதிகரித்து விட்டது. மேலும் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் காலம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது நான் தற்பொழுது சிறந்த மனிதனாக வாழ்ந்து வருகிறேன், டிம் பெய்ன் அல்லது ஆரோன் பின்ச் யார் பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு என்னுடைய முழு ஆதரவும் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

லிமிட்டட் ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.