ஐபில் தொடரில் சன் ரைசெஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரான டாம் மூடி, ரஷீத் கான் பந்து வீச்சை கணிப்பது இந்திய அணிக்கு கடிமனமான சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
19 வயது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், தற்போது அனைவரும் வியக்கும் அளவிற்கு சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணி உலககோப்பைக்கு தகுதி பெறுதவதற்கு மிக முக்கிய காரணம் இவரது பந்து வீச்சு.
2019ம் ஆண்டு ஐபில் தொடரில் பல அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறார். சன் ரைசெஸ் ஹைதராபாத் அணி பைனல் வரை செல்ல பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் காரணம் என்றாலும், பந்துவீச்சில் ரஷீத் கான் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் முதல் ஐசிசி டி20 தொடர் பங்களாதேஷ் அணியிடன் நடந்தது. தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இதில் ரஷீத் கான் 3 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றார்.
ஜூன் 14 ம் தேதி பெங்களூருவில் துவங்க இருக்கும் இந்திய ஆப்கானிஸ்தான் போட்டியை அனைவரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். அதற்க்காக அனைத்து வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதற்கான பயிற்சியில் ஈடுபட ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் பெங்களூரு மைதானத்துக்கு வந்து விட்டனர்.
இந்த டெஸ்ட் போட்டி குறித்து முன்னாள் ஆஸ்திரேலியா வீரரும் சன் ரைசெஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, “இந்திய அணிக்கு ரஷீத் கான் கடும் அச்சுறுத்தலாக இருப்பார். பெங்களூருவில் பந்து சுழர்கிறதா இல்லையா என்பது அவருக்கு கவலை இல்லை, தானாகவே வாய்ப்பை உருவாக்கி வீரர்களை திணற செய்து ஆட்டமிழக்க செய்வார். இவரது பந்து வீச்சை கணிப்பது மிகவும் கடினமான சவாலாக இந்திய அணிக்கு இருக்கும்” என கூறினார்.
ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் விராத் கோலி தோள்பட்டை வலியின் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். மேல்ஜம் அதை போட்டியில் அஜிங்க்யா ராஹனே கேப்டன் ஆக செயல் படுவார் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்தது.