கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்தார் மிட்செல் ஜான்சன்!!

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் பிக் பாஷ் டி20 லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார் ஜான்சன். மற்ற நாடுகளின் டி20 தொடர்களிலும் ஆடமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன். ஆஸ்திரேலியா அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் கலக்கிய காலத்திற்குப் பின்பு, அந்த அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல் ஜான்சன். தனது பவுன்சர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நிலைகுலையவைத்தவர். ஆஸ்திரேலிய அணியின் தூணாக கருதப்பட்ட அவர், கடந்த 2015ம் ஆண்டு கடைசியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு குட்பை சொன்னவர் ஐபிஎல், பிக் பாஷ் போன்ற ப்ரீமியர் போட்டிகளில் பங்கேற்றுவந்தார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகத்தில் `ஏன் நான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், “அனைத்தும் முடிந்துவிட்டது. நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன். கடைசி விக்கெட்டையும் எடுத்துவிட்டேன். இன்று முதல் எல்லா விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுகிறேன்.

அடுத்த வருடம் வரை டி20 தொடர்களில் விளையாட முடியும் என்று மனதளவில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் எனது உடம்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை அப்படி விளையாடி 100 சதவிகிதம் அணிக்கு ஒத்துழைப்பு தரமுடியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஏதாவது நல்லது செய்துள்ளனேனா என்பது தெரியாது. ஆனால் கிரிக்கெட்டில் எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளது. ஆனால் கோச்சிங் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவங்கள் இல்லை. எனினும் சமீபகாலமாக இளம்வீரர்களுடன் சேர்ந்து விளையாடியது மகிழ்ச்சி தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஷ் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் ஓய்வு
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மிட்செல் ஜான்சன். 37 வயதாகும் இவர் சர்வதேச போட்டியில் இருந்த ஓய்வு பெற்றாலும் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த அணி 2016-17 சீசனில் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

இவர் தற்போது பிக் பாஷ் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஆனால், ஐபிஎல் தொடர் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

பிக் பாஷ் டி20 லீக்கில் 19 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கதுவ்

Vignesh G:

This website uses cookies.