பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு இவர் விண்ணப்பித்துள்ளார்!! இனி சஞ்சய் பாங்கர்க்கு ஆப்பு!!

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு உள்ளூர் மூத்த பயிற்சியாளர் விண்ணப்பித்துள்ளதால், இனி தற்போதைய பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் விண்ணப்பித்தாலும் கிடைப்பது சற்று கடினமாகியுள்ளது.

கர்நாடகா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் இந்தியாவின் மூத்த பயிற்சியாளர்களில் ஒருவரான ஜே அருண்குமார், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

தற்போது பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வரும் சஞ்சய் பாங்கர் பணி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவு பெற்றதால், அவர் இம்மாதத்துடன் விலகுகிறார். புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என முன்னமே அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கு மூத்த பயிற்சியாளர் ஜே அருண் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். இவர் கர்நாடக ரஞ்சிக்கோப்பை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேபோல், 2017 முதல் 2019 வரை ஹைதராபாத் ரஞ்சிக்கோப்பை அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 2017ம் ஆண்டிலிருந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இவர் தலைமையில் 2013/14 மற்றும் 2014/15ஆம் ஆண்டுகளில் கர்நாடகா அணி உள்ளூரில் உள்ள அனைத்து கோப்புகளையும் வென்று குவித்தது. போட்டி முடிந்த பிறகு இவரின் பயிற்சி குறித்து வீரர்களும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதன் பிறகு ஹைதராபாத் அணிக்காக பொறுப்பேற்ற. இவர் இரண்டு சீசனில் மட்டும் பயிற்சியாளராக இருந்துவிட்டு, தற்போது புதுச்சேரி ரஞ்சிக்கோப்பை அணியின் பயிற்சியாளராக சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

ஐசிசி விதித்துள்ள பேட்டிங் பயிற்சியாளருக்கான வரைமுறைகளான, ஐபிஎல் அல்லது ரஞ்சிக்கோப்பை அணிகளில் பயிற்சியாளராக இரண்டு வருடங்கள் இருந்திருக்க வேண்டும். 60 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்க்கு இவர் தகுதியாக இருந்ததால், இவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது.

தற்போது பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் சஞ்சய் பாங்கர் மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் விண்ணப்பித்து அதன் மூலம் இறுதிக்கட்ட தேர்வை எதிர்கொண்டு உள்ளே வரலாம் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்தது. ஜே அருண்குமார் தற்போது விண்ணப்பித்துள்ளதால், இனி சஞ்சய் பாங்கர் விண்ணப்பித்தாலும் அவருக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக என பேசப்பட்டு வருகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.