உலகக்கோப்பையை வென்ற கையோடு இங்கிலாந்து அணிக்கு குட்பை சொன்ன கிரிக்கெட் வீரர் !!

உலகக்கோப்பையை வென்ற கையோடு இங்கிலாந்து அணிக்கு குட்பை சொன்ன கிரிக்கெட் வீரர்

உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்ற கொண்டாட்டமே அடங்கும் முன்னர், இங்கிலாந்து வீரர் ஒருவர் ஓய்வு அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலக கோப்பை கனவு நனவாகியுள்ளது. உலக கோப்பை இறுதி போட்டியில் ஸ்டோஸின் போராட்டத்தாலும் பல அதிர்ஷ்டங்களின் உதவியுடனும் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.

LONDON, ENGLAND – SEPTEMBER 27: Jade Dernbach of Surrey with the Specsavers County Championship Division One Cup during Day Four of the Specsavers County Championship Division One match between Surrey and Essex at The Kia Oval on September 27, 2018 in London, England. (Photo by Jordan Mansfield/Getty Images)

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஜாட் டென்பேக் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் 2011ம் ஆண்டு அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் ஜாட் டென்பேக். இவர் 2014ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியில் ஆடினார். அதன்பின்னர் இங்கிலாந்து அணியில் ஆடவில்லை.

டெத் பவுலிங்கிற்கு பெயர்போன இவர், தனது கெரியரில் இங்கிலாந்து அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளிலும் 34 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியான தருணத்தில், தனது ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே சரியான தருணம் என்று கூறி ஓய்வறிவித்துள்ளார். கவுண்டியில் சர்ரே அணிக்காக ஆடிவரும் இவர், தொடர்ந்து அதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.