கோஹ்லி பாட்சா பலிக்காது; இவர்தான் கலக்குவார் – பாக்., வீரரின் சர்ச்சையான கருத்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோஹ்லியை விட இந்த இந்திய வீரர் தான் சிறப்பாக செயல்படுவார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். விரைவில் இயல்பான பயிற்சியிலும் ஈடுபடவிருக்கின்றனர். முதல்முறையாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதி போட்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் எந்த இந்திய வீரர் சிறப்பாக செயல்படுவார் என்பது குறித்தும் கோஹ்லியின் செயல்பாடு குறித்தும் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா.

அவர் கூறுகையில், “அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பந்துவீச்சார்களின் பங்கு மிக முக்கியமானது. பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொடுத்தால் மட்டுமே அணி எளிதில் வெற்றி பெறும். அந்தவகையில், இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஜடேஜாவின் பங்கு இன்றியமையாதது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் தனது முழு பங்கினை கொடுக்கக்கூடியவர். ஆகையால், விராத் கோஹ்லியை விட ஜடேஜாவின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கிறேன். நிச்சயம் அவரை அணி சரியாக பயன்படுத்த வேண்டும்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22 வரை நடக்கவிருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே தனிமை படுத்துதலில் உள்ளனர். விரைவில், இவர்கள் இயல்புநிலை பயிற்சிக்கும் திரும்ப உள்ளனர்.

Prabhu Soundar:

This website uses cookies.