கேப்டனாக நீ செய்த தவறே இதுதான் ; புதிய கேப்டனை வெளுத்து வாங்கிய ஜடேஜா !

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் ஏப்ரல் 9 முதல் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8லீக் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு வெற்றியும் ஆர்சிபி அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று இருக்கிறது.

தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி முதல் 12 ஓவர்கள் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

அப்போது ராஜஸ்தான் அணி வெறும் 58 ரன்கள் மட்டுமே குவித்து மோசமாக விளையாடி வந்தது. இதற்கு முக்கிய காரணம் டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ், ரபாடா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்களது 3 ஓவர்களை சிறப்பாக போட்டு அசத்தினர்.

ஆனால் பண்ட் சிறந்த பார்மில் இருந்த அஸ்வினுக்கு தொடர்ந்து 4 ஓவரை கொடுக்காமல் ஸ்டோயின்ஸுக்கு 13வது ஓவரை கொடுத்தார். ஸ்டோயின்ஸ் ஓவரை டேவிட் மில்லர் அடித்து நொறுக்கி 15 ரன்கள் எடுத்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இதன்பிறகு பார்முக்கு வந்த மில்லர் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் குவித்தார். இதன்பிறகு களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் கடைசி இரண்டு ஓவர்களில் 4 சிக்ஸர்களை அடித்து ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். கையில் இருந்த போட்டியை பண்ட்டின் தவறால் நழுவவிட்டனர். இதனால் பண்ட்டின் இந்த தவறை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பண்ட்டின் தவறை சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் கூறுகையில் ” அந்த ஓவர் (13வது, ஸ்டோயின்ஸ்) தான் போட்டியையே மாற்றி அமைத்தது. அதுவரை 55-5 என்ற கணக்கில் ராஜஸ்தான் இருந்தது.

அஸ்வின், ரபாடா, வோக்ஸ், ஆவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். இவரகளது பந்துவீசு பாரக்கவே வித்தியாசமாக இருந்தது. 13வது ஓவரை அஸ்வினிடம் கொடுக்காமல் இருந்ததே மிகப்பெரிய தவறு. மிடில் ஓவர்களில் டாம் கரன் மற்றும் ஸ்டோயின்ஸை பயன்படுத்தி ராஜஸ்தானை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள்” என்று இந்திய வீரர் அஜய் ஜடேஜா கிரிக்பஸிற்கு பேட்டி அளித்துள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.