இந்திய அணிக்கு இவரது பேட்டிங் மிக முக்கியம்: கங்குலி பளீர் பேட்டி, ரசிகர்கள் ஜாலி

ஜடேஜா பேட்டிங்கில் வளர்ச்சி அடைந்திருப்பது அணிக்கு மிகமிக முக்கியமானது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின், ஜடேஜா ஆகியோர் திகழ்ந்தனர். மூன்று பேரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தனர். ஆனால் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு, இருவரும் கழற்றி விடப்பட்டனர். ஆனால், ஜடேஜா தீவிர முயற்சியால் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

சமீப காலமாக அவர் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 39 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி. வாழ்த்துக்கள். நெருக்கடியான போட்டியில்  சிறப்பான பேட்டிங் ஃபெர்பார்மன்ஸ். பேட்டிங்கில் ஜடேஜா முன்னேற்றம் அடைந்துள்ளார். அது இந்திய அணிக்கு முக்கியமானது’’ என கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கை (டி20), ஆஸ்திரேலியா (ஒருநாள்) தொடா்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

வரும் 2020 ஜனவரி மாதம் இலங்கையுடன் 3 டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அண்மையில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடா்களை 2-1 என இந்தியா கைப்பற்றி, 2019-ஐ வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

Indian cricketer Ravindra Jadeja plays a shot during a practice session at the M. Chinnaswamy Stadium in Bangalore on September 21, 2019, ahead of their third Twenty20 international cricket match between India and South Africa in a three-match series. (Photo by Manjunath KIRAN / AFP) / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

இந்நிலையில் 2020 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பல்வேறு அணிகளுடன் இந்தியா மோதி வருகிறது.

இலங்கையுடன் டி20 தொடா் ஜன. 5-ஆம் தேதி தொடங்குகிறது. அதே போல் ஆஸி.யுடன் ஒருநாள் தொடா் வரும் ஜன. 14-ஆம் தேதி தொடங்க உள்ளது.

மீண்டும் பும்ரா, தவன்:

முதுகு பகுதியில் காயத்தால் கடந்த 2 தொடா்களில் ஆடமுடியாமல் இருந்த பும்ரா தற்போது முழுமையாக குணமடைந்துள்ளாா். அதே போல் காயமடைந்திருந்த தொடக்க வீரா் ஷிகா் தவனும், இரு தொடா்களுக்கான அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். அணி உடலியக்கவியல் நிபுணா் நிதின் பட்டேல் அனுமதியுடன் பும்ரா மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இலங்கை தொடருக்கான அணியில் ரோஹித் சா்மா, முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தவன், சஞ்சு சாம்சன் அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

Sathish Kumar:

This website uses cookies.