பாண்டியாவிற்குப்பதில் இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகும் இளம் ஆல் ரவுண்டர்!! வேற லெவல் ப்லேயர்!

முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி, 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ 164, இந்தியா ‘ஏ’ 303 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. ஹெய்ன்ரிச் கிளாசன் (35), வியான் முல்டர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக துவங்கியது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிக்கு ஹெய்ன்ரிச் கிளாசன் (48), வியான் முல்டர் (46) ஆறுதல் தந்தனர். அடிக்கடி மழை குறுக்கிட போட்டி பாதிக்கப்பட்டது. டேன் பீட் (1), மார்கோ ஜான்சன் (0) ஏமாற்றினர்.

இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 9 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லுதோ சிபாம்லா (5), லுங்கிடி (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் நதீம் 3, ஜலஜ் சக்சேனா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிக்கு ஒரு விக்கெட் கைவசம் உள்ள நிலையில் 40 ரன் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்தது.

தென் ஆப்பிரிக்க  ஏ அணி, 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி, 58.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ தரப்பில் நதீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு இந்திய ஏ அணி வெற்றி பெற 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்திய ஏ அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்ட நாயகனாக ஜலஜ் சக்‌ஷேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து அபாரமாக ஆடி வரும் ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்சேனா இன்று அறிவிக்கப்படும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஒருவேளை ஹார்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுத்தால் இவர் கண்டிப்பாக இந்திய அணியில் இடம் பிடித்து ஆட பெரும் வாய்ப்புகள் உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.