6000 ரன்கள்..300 விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணியில் சேர்க்கப்படாத ஆல் ரவுண்டர்!!

கடந்த நான்கு வருடங்களாக பிசிசிஐயின் சிறந்த ஆல்ரவுண்டர் விருதைப் பெற்று வருபவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது ஜலஜ் சக்‌ஷேனா.

இந்நிலையில் சக்‌ஷேனா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். துலீப் கோப்பைப் போட்டியில் இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் இந்தியா ப்ளூ அணி சார்பாக விளையாடிய சக்‌ஷேனா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்த 19-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னால் இதைச் சாதித்த 18 பேரும் இந்தியாவுக்காக விளையாடிய நிலையில் சக்‌ஷேனா மட்டுமே இந்திய அணியில் இடம்பெறாத ஒரே துரதிர்ஷ்ட வீரராக உள்ளார்.

இதுவரை 113 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜலஜ் சக்‌ஷேனா 6,044 ரன்களும் 305 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

  1. சி.கே. நாயுடு
  2. லாலா அமர்நாத்
  3. விஜய் ஹஸாரே
  4. வினு மண்கட்
  5. சி. சர்வேட்
  6. பாலி உம்ரிகர்
  7. பாபு நத்கர்னி
  8. சந்து போர்டே
  9. எம்.எல். ஜைசிம்ஹா
  10. சலீம் துரானி
  11. எஸ். வெங்கட் ராகவன்
  12. சையத் அபித் அலி
  13. மதன் லால்
  14. கபில் தேவ்
  15. ரவி சாஸ்திரி
  16. மனோஜ் பிரபாகர்
  17. எஸ். பஹுதுலே
  18. சஞ்சய் பங்கர்
  19. ஜலஜ் சக்‌ஷேனா

 

இவ்வளவு ரன்கள் இவ்வளவு விக்கெட்டுகள் எடுத்தும் இன்னும் கூட இந்திய அணியில் இடம் பிடிக்காத ஒரே வீரராக இருக்கிறார் இவர். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்காக ஆடி வரும் இவர் தற்போது வரை ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

இதற்கு முன்னதாக உள்ளூர் தொடரில் நன்றாக விளையாடி அதற்காக கொடுக்கப்படும் லாலா அமர்நாத் அவர்கள் தொடர்ந்து 4 முறை பெற்றுள்ளார் இவர். தற்போது வரை இந்திய அணியில் எப்படியாவது இடம் கிடைத்துவிடும் என்ற கனவுடன் உள்ளூர் போட்டியில் அபாரமாக ஆடி வருகிறார்.

இவரை வெறும் டெல்லி கேப்பிடல் அணி 20 லட்சத்திற்கு மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காகவும் பங்கேற்றுள்ளார். ஆனால் பெரிதாக போட்டிகளில் இவரை ஆடவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Sathish Kumar:

This website uses cookies.