அடுத்த நடைபெறும் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளுக்கு கண்டிப்பாக அணியில் இடம் பெறுவேன் சூளுரைத்த முன்னாள் வீரர் ரசிகர்கள் ஜாலி
இங்கிலாந்தில் தற்போது வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இங்கிலாந்து அணி அவசர அவசரமாக வேறு வழியின்றி ஏற்பாடு செய்தது. ஏற்கனவே நடைபெற இருந்த பாகிஸ்தான் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது .
அதன்பின்னர் இழப்புகளை ஈடுகட்ட, ஆயிரக்கணக்கான கோடிகளை இழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தொடரை ஏற்பாடு செய்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது அமைந்தது. தற்போது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று விட்டது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மீதமிருக்கிறது. அதனை தொடர்ந்து இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. இங்கிலாந்தில் இன்னும் 6 மாத காலத்தில் 6 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி விட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சூளுரைத்துள்ளார். அவர் கூறுகையில் …
என்னிடம் வேறு ஏதும் திட்டம் இல்லை. இந்த கோடைகாலம் முழுவதும் 6 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடினால் நல்லதுதான். ஆனால் எப்படியாவது 4 போட்டிகளில் விளையாடி விட வேண்டும். நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது
.மருத்துவ நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்து உழைத்து வருகிறேன். ஓய்வு எடுப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கி விட்டன. இந்த சூழ்நிலை எப்போதும் நீடிக்கவேண்டும் ரசிகர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.