மீண்டும் ஒருநாள் அணிக்கும் திரும்ப முயற்சிக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்! வெறித்தனமான பயிற்சி..
மீண்டும் ஒருநாள் அணிக்கும் திரும்ப விருப்பம் தெரிவித்ததோடு, அதற்க்கான தீவிர பயிற்சியை செய்து வருகிறார் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் சம்ஸ் பால்க்னர். இவர் சமீபகாலமாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க இயலாமல் தவித்து வருகிறார். இருப்பினும் பிக் பாஸ் லீக் தொடரில் ஹொபேர்ட் அணிக்காக தொடர்ந்து ஆடிவருகிறார்.
இந்நிலையில், தாஸ்மேனியா தீவை சேர்ந்த இவர், அந்த தீவிற்கான அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து ஆடிவரும் இவரை ஏன் ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கினீர்கள் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து மனம் திறந்த ஜேம்ஸ் பால்க்னர் தொடர்ந்து முயற்சிப்பதாகவும், ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஒருநாள் போட்டிகளில் ஆடவும் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:
“நான் இன்னும் அணிக்காக காத்திருக்கிறேன். அதேநேரம் தொடர்ந்து பயிற்சியும் செய்து வருகிறேன். இந்த ஊரடங்கில் காணொளி மூலமாக அணி வீரர்களுடன் பேசி வருகிறேன்.” என்றார்.
மேலும், டாஸ்மேனியா நிர்வாகிகள் குறித்து பேசிய அவர், “நான் அணி நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசினேன். அப்போது எவ்வளவு காலம் என்னால் முடியுமோ. அத்தனை நாட்களும் ஆட காத்திருக்கிறேன். கடந்த முறை அவர்களுடன் பேசியபோது, நான் ஒப்பந்தத்தில் இல்லாமல் போனாலும், ஆடுவதற்க்காக எப்போதும் இருப்பேன் என்றேன். அதற்க்காக பயிற்சிக்கிறேன்.” என்றார்.
ஜேம்ஸ் பால்க்னர் ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். கடந்த சில வருடங்களாக அவர் எந்த அணிக்கும் ஆடவில்லை. குறிப்பாக, ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஜேம்ஸ் பால்க்னர் இதுவரை 770 ரன்களும், 50 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.