கென்ட் மற்றும் இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் ஜேம்ஸ் ட்ரெட்வெல் ஒரு 18 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.
2000 ஆம் ஆண்டில் ட்ரெட்வெல் அறிமுகம் ஆனார், 613 ஆட்டங்களில் 830 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த 18 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர் தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் 45 ஒருநாள் போட்டிகளிலும் 18 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஆடி உள்ளார்.
2010 முதல் 2015 வரை இவர் ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியுள்ளார் 45 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 60 விக்கெட்டுகளையும் 45 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்காக நன்றாக செயல்பட்டு வரும் 2013ம் ஆண்டு தனது நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்ல பெரும்பங்கு வகித்தவர் இவர்.
தற்போது அனைத்து வகையான கேட்பதிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்
இது குறித்து அவர் கூறியதாவது …
எனது நாடு மற்றும் எனது உள்ளூர் அணிக்காக இத்தனை வருடங்கள் ஆடியது எனக்கு பெருமை அளிக்கிறது. மைதானத்திற்கு உள்ளேயும் மைதானத்திற்கு வெளியேயும் எனக்கு நிறைய நல்ல நேரமும் நினைவுகளும் கிடைத்துள்ளது. தற்போது நான் இதனைக் கடந்து செல்லவேண்டும் கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மீண்டும் நான் கிரிக்கெட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன் இதனால் நடுவராகவும் அல்லது பயிற்சியாளராகவும் நான் மாற உள்ளேன் இந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இத்தனை நாள் போட்டிகளில் ஆடி அதற்கு நான் எனது அணியின் மேலாளர் அதற்கு நன்றி தெரிவிக்கிறேன் மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் என்னுடன் ஆடிய வீரர்களுக்கும் ரசிகர் இருக்கும் மிகப்பெரிய ஆதரவளித்த இங்கிலாந்து ரசிகர்களூக்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன் என்று கூறினார்.