இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வின்ஸ் சேர்ப்பு
ஜேம்ஸ் வின்ஸ்
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தாவித் மலன் அணியில் சேர்க்கப்பட்டார்.
நாளை இந்தியா ‘ஏ’- இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக தாவித் மலன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சாம் குர்ரானை இங்கிலாந்து அனுப்பியுள்ளது. தற்போது தாவின் மலனை அனுப்பியுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் அணி: இயோன் மோர்கன் (இ) , ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் , ஜோ ரூட் , ஜோஸ் பட்லர் , மொயின் அலி , பென் ஸ்டோக்ஸ் , டேவிட் வில்லி , லியாம் பிளென்கட் , அடில் ரஷீத் , மார்க் வூட் , ஜேக் பால் , ஜேம்ஸ் வின்ஸ்
இந்தியா ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (இ) , ஷிகார் தவான் , ரோகித் சர்மா , லோகேஷ் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் , டோனி , தினேஷ் கார்த்திக் , யுஜவேந்திர சாஹல் , குல்தீப் யாதவ் , ஸ்ரதுல் தாக்கூர் , ஹர்திக் பாண்டிய , சித்தார்த் கவுல் , புவனேஸ்வர் குமார் , சுரேஷ் ரெய்னா , உமேஷ் யாதவ் , அக்சர் படேல்
இங்கிலாந்து – இந்தியா இடையிலான தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹெட்டிங்லேயில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.