இவர்தான் எனக்கு போட்டி வேறுயாருமில்லை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கொக்கரிப்பு

இவர்தான் எனக்கு போட்டி! வேறுயாருமில்லை! வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கொக்கரிப்பு!

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இல்லாத காரணத்தால் அந்த அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற வழிநடத்தினார்.

அவரது முதல் போட்டியிலேயே தோல்வியும் அடைந்துள்ளார். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அனுபவமான வீரர் ஸ்டூவர்ட் பிராடை வெளியே விட்டுவிட்டு இளம் வீரரை அணியில் சேர்த்திருந்தார். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கிலும் இங்கிலாந்து தப்பிவிட்டது அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஆக்ரோஷமான முறையில் அணியை வழிநடத்தி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில்…

இது கிரிக்கெட் ஆட்டம் ஆகும். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் பிடிக்க வரும்போதெல்லாம் நான் எப்படியாவது அவருக்கு பந்து வீச வேண்டும் என்று நினைப்பேன். அதேபோல் நான் பேட்டிங் பிடிக்க வரும் போதெல்லாம் அவரும் பந்து வீசுகிறார். அவரிடமிருந்து எந்த தருணத்திலும் எந்தவிதமான திறமையும் நான் எதிர்பார்க்க முடியும். அவரை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை.

SOUTHAMPTON, ENGLAND – JULY 12: England captain Ben Stokes bowls during day five of the 1st #RaiseTheBat Test match at The Ageas Bowl on July 12, 2020 in Southampton, England. (Photo by Mike Hewitt/Getty Images)

அவர் எனக்கு போட்டியாளர். தன்னிடம் இருக்கும் அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அவரும் ஒருவர். அவருக்கு எனது மரியாதைகள் எப்போதும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக ஆடும் போது நாம் படு வேகமாகவும் வெறித்தனமாக வேண்டும் இல்லை. என்றால் அவரை வெல்ல முடியாது. தனது அணிக்காக பங்களிக்க மிக அதிகமான திறமைகளை தன்னிடம்  வைத்துள்ளார்.

அதே போல் நானும் பேட்டிங் பிடிக்க வரும்போது அவரும் என்னை போல் தான் நினைப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவரிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு போட்டி இல்லை. இறுதியில் பார்த்தால் இது ஒரு அணி விளையாட்டாகும் ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் அனைவரும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார் ஜேசன் ஹோல்டர்.

Mohamed:

This website uses cookies.