டிரென்ட் போல்ட் அல்லது ஜஸ்பிரித் பும்ரா இருவரில் யார் மிகச்சிறந்த வீரர் – மைக்கேல் வாகன் விளக்கம்

சமீபத்தில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருந்தார். விராட் கோலி அடிப்படையில் ஒரு இந்திய வீரர் என்பதால் அவருக்கு அதிக அளவில் ரசிகர் துணை உண்டு அதனால் அவர் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் பிரசித்தி பெற்று விட்டார்.

ஆனால் கேன் வில்லியம்சன் அந்த மாதிரியான ரசிகர் பட்டாளமும் சமூக வலைத்தளத்தில் ஆரவாரமும் கிடையாது. எனவே கேன் வில்லியம்சன் விராட் கோலியை விட என்னைப் பொறுத்தவரையில் மிகச்சிறந்த வீரர் என்றும், விராட் கோலி போல கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறந்து இருந்து இந்திய அணியில் விளையாடி இருந்தால் நிச்சயமாக அவர் ஒரு மிகச் சிறந்த வீரராக வலம் வந்து இருப்பார் என்றும் கூறியிருந்தார்.

இது சமூக வலைத்தளத்தில் பல வகையில் சர்ச்சையை தூண்டியது. அந்த சர்ச்சை முடிவதற்கு முன்பாக அடுத்த ஒரு கேள்வி அவரிடம் எடுத்து வைக்கப்பட்டது. போல்ட் அல்லது பும்ரா இருவரில் யார் சிறந்த பந்துவீச்சாளர் என்ற கேள்வியை தற்போது அவரிடம் கேட்டுள்ளனர்.

பாதுகாப்பான பதிலை கூறிய மைக்கேல்

இந்த கேள்விக்கு மைக்கேல் சற்று நிதானமாக இருவருக்கும் சாதகமாக ஒரு பதில் கூறியிருக்கிறார். போல்ட் நியூஸிலாந்து எனக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். பல போட்டிகளில் பல வெற்றிகளையும் அவர் வாங்கித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் பும்ரா இந்திய அணிக்காக சமீப காலங்களில் மிக சிறப்பாக செயல்பட்டு தன்னை நாளுக்கு நாள் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக முன்னெடுத்து வருகிறார். எனவே இவர்கள் இருவரில் யார் சிறந்த வீரர் என்று பிரித்துக் கூறி விட முடியாது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று சுமூகமாக பேசி முடித்துவிட்டார்.

மும்பை அணியில் ஒன்றாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோத உள்ள போல்ட் – பும்ரா

இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்ற மாதம் வரை ஐபிஎல் தொடரில் ஒரே அணியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தனர். ஆனால் வருகிற ஜூன் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உள்ள போட்டியில் இவர்கள் இருவரும் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.