வீடியோ: ‘எதிர்காலம் எங்கயோ போகப்போகுது’.. தன்னைப்போல பந்துவீசிய சிறுவனுக்கு பும்ராஹ் கூறிய வாழ்த்து!
அச்சு அசலாக நடுரோட்டில் பும்ராவைப் போல பந்துவீசிய சிறுவனின் வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு பும்ராவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐந்து மாதமாக காலமாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் துவங்க இருக்கிறது. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த அனுமதி கிடைக்காததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடர் சுமார் ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்று நவம்பர் 10ஆம் தேதி இறுதி போட்டி முடிவடைகிறது.
இந்த ஐபிஎல் தொடருக்காக வருகிற 20ம் தேதிக்கு மேல் இந்தியாவில் இருந்து ஐபிஎல் அணி வீரர்கள் துபாய்க்கு செல்ல இருக்கின்றனர். வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டில் இருந்து துபாய்க்கு நேரடியாக வந்து விடுவர்.
2020 ஐபிஎல் தொடரில் ரெய்னா, தோனி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, விராட்கோலி போன்ற பல முன்னணி வீரர்களுடன் புதிய இளம் வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட காத்திருக்கின்றனர்.
மும்பை அணிக்கு கடந்த சில சீசன்களாக முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு ஆக்சன் மற்றவர்களை விட சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். இவரது பந்துவீச்சு ஆக்சன் பல விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் இவரது சிறப்பான செயல்பாடு ஒருபோதும் குறைந்ததில்லை.
இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களையும் இந்த பந்துவீச்சு ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அண்மையில் நடுரோட்டில் சிறுவன் ஒருவன் பும்ராவை போலவே அச்சு அசலாக பந்துவீசும் வீடியோவை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அப்லோட் செய்து இருந்தார்.
இதைக்கண்ட பும்ரா “நிச்சயம் இந்த சிறுவனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.” என கமெண்ட் செய்திருந்தார். இவர் கமெண்ட் செய்த பிறகு, சிறுவனின் பந்துவீச்சு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
வீடியோ: