இந்திய அணிக்கு விழுந்த அடுத்த பெரிய அடி… ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகிய மிக மிக முக்கியமான வீரர் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை என இரு பெரும் தொடர்களை எதிர்கொள்ள உள்ளது.

இதில் இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (08-08-2022) அறிவிக்கப்பட உள்ளது.

ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்தான அறிவிப்பிற்கு வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஹர்சல் பட்டேல் காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது இந்திய அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஜஸ்ப்ரிட் பும்ராஹ்வும் காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ராஹ் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அர்ஸ்தீப் சிங், தீபக் சாஹர் போன்ற வீரர்களுக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இது குறித்து பிசிசிஐ., நிர்வாகி ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பும்ராஹ்விற்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு இல்லை. பும்ராஹ் இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளர். டி.20 உலகக்கோப்பை தொடரும் நெருங்கி வருவதால் இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, அவர் டி.20 உலகக்கோப்பை தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெறுவதே முக்கியம்” என்று தெரிவித்தார்.

அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வந்தாலும், பும்ராஹ் போன்ற மிக சிறந்த வீரர் விலகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Mohamed:

This website uses cookies.