பும்ராஹ்வை விட இந்திய அணிக்கு இவர் தான் முக்கியம்… உலகக்கோப்பை தொடரில் சம்பவம் செய்ய போகும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இவர்கள் தான்; டேல் ஸ்டைன் ஓபன் டாக் !!

பும்ராஹ்வை விட இந்திய அணிக்கு இவர் தான் முக்கியம்… உலகக்கோப்பை தொடரில் சம்பவம் செய்ய போகும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இவர்கள் தான்; டேல் ஸ்டைன் ஓபன் டாக்

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்பது குறித்தான தனது தேர்வை முன்னாள் கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டைன் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளதால், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரரான டேல் ஸ்டைன், உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இது குறித்து டேல் ஸ்டைன் பேசுகையில், “உலகக்கோப்பை தொடரில் காகிசோ ரபாடா, ஷாகின் ஷா அப்ரிடி, மார்க் வுட், டிரண்ட் பவுல்ட் மற்றும் இந்தியாவின் முகமது சிராஜ் ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள் என கருதுகிறேன். முகமது சிராஜ் பந்தை மிக சிறப்பாக ஸ்விங் செய்து வருகிறார், அவரால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்ளின் விக்கெட்டை கூட இலகுவாக கைப்பற்ற முடிகிறது. முகமது சிராஜின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

டேல் ஸ்டைன் தனது தேர்வில் முகமது சிராஜிற்கு இடம் கொடுத்திருந்தாலும், இந்திய அணியின் மிக முக்கிய வீரரான பும்ராஹ்வை தேர்வு செய்யாதது ஆச்சரியமான விசயம் தான்.

Mohamed:

This website uses cookies.