“நட்சத்திர வீரர் நீக்கம்” இலங்கை ஒருநாள் தொடரில் முக்கிய மாற்றம்!

இலங்கை ஒருநாள் தொடருக்கு சேர்க்கப்பட்ட பும்ரா, தற்போது நீக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற டி20 தொடரின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார். டி20 உலககோப்பை தொடரிலும் இடம்பெற்று பின்னர் நீக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என்று இந்திய தேசிய அகடமி பிசிசிஐ-க்கு அறிவிப்பு கொடுத்தது. இதன் அடிப்படையில் இலங்கை அணியுடன் வருகிற 10-ஆம் தேதி துவங்கவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பும்ரா சேர்க்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டது.

இந்நிலையில் ஜனவரி 9ம் தேதி பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், பும்ரா இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்படுகிறார். அனைத்திந்திய சீனியர் தேர்வுக்குழு, பும்ரா விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் நடக்கவுள்ளது. இந்த தொடரானது இந்தியாவிற்கு பைனலுக்குள் செல்ல மிகவும் முக்கியம். அதில் முக்கிய வீரராக அவர் இருக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருக்கிறது.

இலங்கை ஒருநாள் போட்டிகளுக்கான  இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

இலங்கை அணியுடன் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 10ம் தேதி கவுகாத்தியில் துவங்குகிறது. அடுத்தடுத்த போட்டிகள் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில நடக்க உள்ளது.

இதைத்தொடர்ந்து பதினெட்டாம் தேதி நியூசிலாந்து அணியுடன் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் துவங்க உள்ளது இத்தொடரின் போது பும்ரா இந்திய அணிக்கு திரும்புவார் எனவும் பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் வந்திருக்கிறது தற்போது அவரை பாதுகாத்து வருவது முழுக்க முழுக்க ஆசிரியர் டெஸ்ட் தொடருக்கு முழு உடல் தகுதியுடன் அவர் இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் தான் என்று தகவல்களும் வருகின்றன.

Mohamed:

This website uses cookies.