இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் வேகப்பந்து வீச்சாளரை பொருத்தவரையில் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்பொழுது வரை அவர்தான் அதிவேக 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முதலிடத்தில் இருக்கிறார். அவரை பின்தொடர்ந்து இர்பான் பதான் 28 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து 3-வது இடத்தில் முகமது ஷமி 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
தற்பொழுது இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தன்னுடைய டெஸ்ட் கேரியரை மிக சிறப்பாக துவங்கி இருக்கிறார். 19 டெஸ்ட் போட்டிகளில் 83 விக்கெட்டுகளை கைப்பற்றி தற்பொழுது கபில்தேவ் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.
இங்கிலாந்து தொடரில் ஜஸ்பிரித் பும்ரா கனவு நிறைவேறுமா
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டி அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கையில், ஜஸ்பிரித் பும்ரா 6 போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் ஆறு போட்டிகளுக்குள் அவர் 17 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் கபில்தேவ் உடைய சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடிப்பார்.
எனவே அனைத்து இந்திய ரசிகர்களும் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடும் அதேவேளையில் புதிய சாதனையை படைக்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்பின் பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 19 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து எரப்பள்ளி பிரசன்னா 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார், மூன்றாவது இடத்தில் அனில் கும்ப்ளே 21 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார், நான்காவது இடத்தில் சுபாஷ் குப்டே 22 போட்டிகளிலும், ஐந்தாவது இடத்தில் வினோ மண்கட் 23 போட்டிகளிலும், ஆறாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா 24 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14 வருடங்கள் கழித்து இந்தியா சாதனை படைக்குமா
இங்கிலாந்தில் நடந்துள்ளது டெஸ்ட் தொடர்களில் இந்தியா இங்கிலாந்து அணியை கடைசியாக 2007-ம் ஆண்டுதான் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது.
எனவே தற்போது பலமாக இருக்கும் இந்திய அணி தன்னுடைய ஆதிக்கத்தை காட்டி 14 வருடங்கள் கழித்து மீண்டும் இங்கிலாந்து அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் தற்போதிலிருந்து எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
இது பற்றி கருத்து கணிப்பு கூறியுள்ள கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய அணி நிச்சயமாக இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்றும் அதுவும் மிக எளிதாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் அவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.