பாகிஸ்தானுக்கு எப்படி வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ்சோ அதே போல் இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட், ஜஸ்பிரித் பும்ராவை பற்றி தற்போது புகழ்ந்து கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக பும்ரா தன்னை மிகப்பெரிய அளவில் ஒரு பவுலர் ஆக தன்னை பலப்படுத்தியுள்ளார். அவரது வளர்ச்சியை தற்பொழுது ஆச்சர்யம் தரும் விதமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
நிச்சயமாக இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் அவர் என்று கூறியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜாம்பவான் வீரர் அம்ப்ரோஸ் ஒரு முறை, பும்ரா தனது உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொண்டால் நிச்சயமாக மிக எளிதில் டெஸ்ட் கேரியரில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று கூறினார். அவர் கூறியது போல நிச்சயமாக பல சாதனைகளை ஜஸ்பிரித் பும்ரா படைப்பார் என்று சல்மான் பட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் இருக்கையில் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பது சிரமம் தான்
ரோகித் சர்மா போன்ற ஒரு கேப்டன் ஐபிஎல் தொடரில் அவரை முதல் 6 ஓவரில் ஒரு ஓவர் மட்டும் அவருக்குக் கொடுப்பார். இறுதி 6 ஓவரில் தான் அவருக்கு மீதமுள்ள மூன்று ஓவர்களை கொடுப்பார். ஏனென்றால் அவர் இறுதியில் பந்து வீசினால் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
நிச்சயமாக எதிரணியை பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க முடியாமல் போனால் குறைந்த பட்சம் 30 அல்லது 40 ரன்களை ஜஸ்பிரித் பும்ரா மூலம் கட்டுப்படுத்துவார். அதுதான் அவர் தற்பொழுது இந்திய அணிக்கும் செய்து வருகிறார் என்று சல்மான் பட் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எப்படி வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரமோ அதுபோல் இந்தியாவுக்கு பும்ரா
பாகிஸ்தானில் ஒரு காலத்தில் வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரம் இறுதி ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீசி எதிரணியை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்துவார்கள். அதை ஒரே ஆளாக நின்று பும்ரா செய்து வருகிறார்.
இந்திய அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், சைனி எனப்பல பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எப்பொழுதும் ஜஸ்பிரித் பும்ரா போல பந்து வீச முடியாது. பும்ரா மிக சிறப்பாக இறுதி ஓவர்களில் யார்க்கர், ஸ்லோவர் பந்துகள், பவுன்சர்கள் என அனைத்து வகை பந்துகளையும் மிக சிறப்பாக வீசுவார். எனவே அவர் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம், இதை நான் எப்பொழுதும் கூறுவேன் என்று சல்மான் பட் இறுதியாக கூறி முடித்தார்.