இந்த வருட விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான சௌராஷ்ட்ரா அணிக்கு அனுபவ வீரர் ஜெயதேவ் உனதக்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே அற்புதமாக ஆடி வருபவர். இதன் காரணமாக அவருக்கு தற்போது இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் உள்ளூர் தொடரில் 50 ஓவர் போட்டிக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் செல்டன் ஜாக்சன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ஜெயதேவ் உனதக்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய வீரர்கள் செட்டேஷ்வர் புஜரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை. ஏனெனில் அவர்கள் இந்திய முதன்மை அணிக்காக தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராகி வருகிறார்கள்.
ஜெயதேவ் உனதக்ட் உனக்கு ஏற்கனவே டோனி தலைமையில் ரைசிங் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அவரிடமிருந்து கேப்டன்ஷிப் தொடர்பான பல நுணுக்கங்களை கற்று இருப்பார். அந்த நுணுக்கங்களை இந்த தொடரில் பயன்படுத்திய அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சவுராஷ்டிரா அணி:
ஜெய்தேவ் உனட்கட் (கேப்டன்), ஷெல்டன் ஜாக்சன் (கீ) கமலேஷ் மக்வானா, தர்மேந்திரசிங் ஜடேஜா, ஹார்விக் தேசாய் (கீ) அர்பித் வசாவாடா, சிராக் ஜானி, பிரேரக் மங்காட், ராஜ்தீப் தர்பார், விஸ்வராஜ் ஜடேஜா, குஷாங் படேல், ஹார்டிக் சாதுதன், அக்விக்னேஷ் அயாச்சி
இந்நிலையில்,
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு உத்தேச அணியில் அஸ்வின், விஜய் சங்கர், முரளி விஜய் போன்றோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி. இந்தத் தொடர் வருகிற 24-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இதில் பங்குபெறும். இந்தத் தொடருக்கான தமிழ்நாடு உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்த அணியில் அஸ்வின், விஜய் சங்கர், முரளி விஜய் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தினேஷ் கார்த்திக் (கேப்டன்), 2. விஜய் சங்கர், 3. அபிநவ் முகுந்த், 4. என். ஜெகதீசன், 5. பாபா அபரஜித், 6. ஆர். அஸ்வின், 7. வாஷிங்டன் சுந்தர், 8. வி. கங்கா ஸ்ரீதர் ராஜூ, 9. ஹரி நிஷாந்த், 10. பிரதோஷ் ரஞ்சன் பால், 11. லோகேஷ்வர், 12. கே. முகுந்த், 13. முரளி விஜய், 14. டி நடராஜன், 15. கே. விக்னேஷ், 16. எம். முகமது, 17. அபிஷேக் தன்வார், 18. ஜே. கவுசிக், 19. சாய் கிஷோர், 20. எம். சித்தார்த், 21. எம். அஸ்வின்.