மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இதை செய்திருந்தால் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஜித்தன் பட்டேல்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப் பெரிய மைதானமாக மாண்டரே மைதானத்தில் நடைபெற்றது. முதல் முறையாக இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் மைதானத்தின் நிலை எந்த அளவிற்கு இருக்கும் என இரு அணி வீரர்களும் குழப்பத்திலேயே இருந்தனர்.
போட்டி நடைபெற்ற முதல் ஓவரில் இருந்து மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே சுழல் பந்து வீச்சில் பந்து அதிக அளவில் டர்ன் ஆனதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் மிகவும் திணறிப் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். குறிப்பாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சமாளிக்க முடியாமல் இரண்டு இன்னிங்சிலும் 150 ரன்களைக் கடக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்ததை நாம் கண்டோம்.
இதற்கு மாறாக, இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே இருக்கிறது என குறிப்பிட்டு இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்நிலையில், இந்த ஆடுகளம் குறித்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஜித்தன் பட்டேல் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது தெரிந்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதத்தை வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் 200 ரன்களுக்கு மேல் அடித்து இருந்தால் ஆட்டம் முற்றிலுமாக இங்கிலாந்து அணி பக்கம் திரும்பியிருக்கும். இதனை வைத்து இங்கிருந்து சுழல் பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இந்திய வீரர்களை திணறடித்து வெற்றியை தங்கள் பக்கம் இழுத்திருக்க முடியும். நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்பு செய்த தவறை சரி செய்துகொண்டு நிச்சயம் வெற்றிக்காக முயற்சிப்போம்.” என பேசியுள்ளார்.