இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி டி20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்தார்.
இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜூலன் கோஸ்வாமி மகளிர் கிரிக்கெட் அணிக்கு பல முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவர் இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காள பெண்கள், கிழக்கு மண்டல பெண்கள்; அத்துடன் ஆசியா பெண்கள் லெவன் மகளிர் கிரிக்கெட் போன்ற அணிகளுக்காக ஆடியுள்ளார். மேலும் 2009 , உலகக் கோப்பைக்கு சென்ற பெண்கள் அணியை வழிநடத்த கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
ஜுலன் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு (வலது கை நடுத்தர) திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 20 க்கும் குறைவாக உள்ளது. 2002ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார். மேலும், 2006-07 பருவத்தில் அவர் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு வழிகாட்டினார் .
2007 ஆண்டிற்கான சிறந்த ஐசிசி பெண்கள் கிரிக்கெட்டராகவும் மற்றும் 2011 சிறந்த பெண்கள் கிரிக்கெட் க்கான எம்ஏ சிதம்பரம் கோப்பையும் வென்றார். ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தையும் பெற்றார். பெண்களுக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் ஓய்வு பெற்ற பிறகு, வேகமாக பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர் இவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
விருதுகள் மற்றும் மரியாதைகள்
- 2007 – ஆண்டின் சிறந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீரர்
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் (2008-2011)
- அதிவேகமான பந்து வீச்சாளர்
- 2010 – அர்ஜுனா விருது
- 2012 – பத்மஸ்ரீ
- முன்னணி சர்வதேச விக்கெட் வீழ்த்துபவர்
கிரிக்கெட் புள்ளிவிவரங்கள்
இதுவரை 10 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள கோஸ்வாமி 40 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் 2 அரைசதங்களுடன் 283 ரங்களும் அடித்துள்ளார்.
166 ஒருநாள் போட்டிகளில் 995 ரங்களும், 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
60 டி20 போட்டிகளில் 329 ரன்களும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர் தற்போது டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.