பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, காயம் அடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஜெய் ரிச்சர்ட்சன் உலக கோப்பை தொடரில் ஆடுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் வீரர் அடித்த பந்தை பில்டிங் செய்கையில் தோள்பட்டையில் உள்ள மூட்டு விலகியதால் உடனடியாக சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டார். அதன்பிறகு, தீவிர காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
ரிச்சர்ட்சன் 11 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை பிடிக்க முயற்சித்த போது, இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது, பிறகு உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்து, அவரை வெளியே எடுத்து சென்றனர் அணி மருத்துவர்கள். பிறகு கையில் பேண்ட் அணிந்து கொண்டு பெவிலியனில் இருந்து அணியை உற்சாகப்டுத்த துவங்கினார்.
அந்த போட்டியில் ரிச்சர்ட்ஸன் காயம் ஏற்படும் முன்னர் 5 ஓவர்கள் வீசி இருந்தார். 5 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். போட்டி முடிந்த பிறகு ஸ்கேன் செய்ய வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
ஆட்டத்தின் முடிவில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:
“அவர் நல்ல நிலையில் ஆடி வந்தார். துரதிஷ்டவசமாக, அவரது தோள்பட்டை சிறிது வெளியே வந்துவிட்டது. அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு ஸ்கேன் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன் பிறகு தன் தெரியவரும் உலககோப்பைக்கு வருவாரா என்று”
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், காயம் குறித்து முழு அளவிலான அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அதை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அணிகளும் ஏப்ரல் 23 ம் தேதிக்குள் தங்கள் உலகக் கோப்பை அணியை அறிவிக்க வேண்டும், ஆனால் ஐ.சி.சி ஒப்புதலுடன் மே மாதத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் மாற்றங்கள் செய்துகொள்ளலாம். ரிச்சர்ட்ஸன் குணமடையும் காலம் அதிகமானால் அவரால் உலகக்கோப்பையில் இடம்பெற இயலாது என தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜூன் 1 அன்று உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தொடங்கும்.
ஆஸ்திரேலியா அணியில் தற்போது வேகப்பந்துவீச்சு கேள்விக்குறியாகியுள்ளது. உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் காலத்திற்குள் மிச்சேல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேஸ்லேவுட் ஆகியோர் காயம் காரணமாக வெளியில் உள்ளனர். உலககோப்பைக்குள் குணமடைவது சற்று கடினமாக இருந்தாலும், அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.