வொர்க் அவுட் செய்துகொண்டிருந்த புகைப்படத்தை மயங்க் அகர்வால் வெளியிட்டிருந்தார். இதற்கு ஆபாசமாக கமெண்ட் அடித்து கிண்டலடித்துள்ளார் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4-வது டெஸ்ட் டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால் இந்திய அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நான்காவது போட்டியில் டிரா அல்லது வெற்றியை இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லலாம். ஆகையால் இந்திய வீரர்களுடன் பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை கண்ட நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் ஆபாசமான கமெண்ட் ஒன்றை அடித்திருந்தார். அதில், “வாழ்த்துக்கள்! ஆண் அல்லது பெண் குழந்தை?” என கேள்வியையும் எழுப்பியிருந்தார். இது பார்வையாளர்களை சிரிக்கும்படி இருந்தது. இதற்கு மயங்க் அகர்வால் பதிலும் அளித்திருக்கிறார்.
இவ்விரு வீரர்களும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஒன்றாக விளையாடி இருக்கின்றனர். இருப்பினும் இந்த வருடம் பஞ்சாப் அணியில் இருந்து நீசம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்தவகையில், மயன்க் அகர்வால் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் “தினமும் போடப்படும் கடின உழைப்பின் மூலமே மாற்றங்களை உணரமுடியும்” என்று பதிவிட்டிருந்தார். இதில் தான் நீசம் கிண்டலடித்தார்.