ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்கள் 2 பேர் திடீர் விலகல்!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என முன்னணி வீரர்கள் இருவர் ஏலத்திற்கு முன்பாக விலகியுள்ளார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் எதிர்பார்ப்பு தற்போது இருந்தே ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஐபிஎல் தொடர்களில் கலந்து கொள்ள உலகின் முன்னணி வீரர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
அடுத்த சீசனுக்காக வீரர்களின் வெளியேற்றம் மற்றும் தக்கவைக்கும் பட்டியலை ஒவ்வொரு அணியும் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதேபோல, ஏலத்திற்கு முன்பாக மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக்கொள்ளவும் அணிகளுக்கு இம்முறை ஒப்புதல் அளித்தது.
அதுவும் நடந்து முடிந்தது. வருகிற 19ஆம் தேதி 2020ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம் துவங்க இருந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் விலகி உள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க் கடந்த 2015ஆம் ஆண்டு ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் விளையாடினார். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இருப்பினும் அந்த தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்ள இருக்கும் காரணமாக ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை. இதே போல் இந்த ஆண்டும் அவர் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது
இதேபோல் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய இன்னொரு முக்கிய வீரர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆவார். இரண்டு முன்னணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Prabhu Soundar:

This website uses cookies.