ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் சாதனை படைப்பாரா ஜோ ரூட் !!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் சாதனையை முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தற்பொழுது மூன்றாவது ஆஷஸ் போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் என்ற வரிசையில் கிரீம் ஸ்மித் சாதனையை முறியடித்து தற்போது 3-வது இடத்தில் உள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூனுஸ் 2007ஆம் ஆண்டு 1788 ரன்கள் அடித்தும், இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்1976ஆம் ஆண்டு 1710 ரன்கள் அடித்து ஒரு வருடத்தில் அதிகமான ரன்கள் அடித்த வீரர்கள் என்ற வரிசையில் முதலிரண்டு இடத்தைப் பிடித்திருந்தனர்.

இவர்களை 2008 ஆம் ஆண்டு மரண பார்மில் இருந்த சவுத்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் 1658 இரண்டடிக்கு அந்த வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

இந்நிலையில் தற்பொழுது டெஸ்ட் தொடரின் நம்பர்-ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 1680 ரன்கள் அடித்து கிரீம் ஸ்மித்தின் சாதனையை முறியடித்துள்ளார் மேலும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 108 ரன்கள் எடுத்தார் என்றால் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைப்பார்.

இந்நிலையில் மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 50 ரன்களை அடித்துள்ளார். இவரைத் தவிர மற்ற எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாட வேண்டும். இதனால் இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் அடித்து 87 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது, இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 58 ரன்கள் அடித்தால் மேற்கூறப்பட்ட சாதனையை முறியடித்து விடுவார் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.