பிக்பாஸ் லீக்கில் விளையாடும் ஜோ ரூட், ஜாஸ் பட்லர்
பிக்பாஸ் லீக் தொடருக்கான சிட்னி தண்டர் அணியில் விளையாட ஜோ ரூட் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் ஆண்டு தோறும் உள்ளூர் டி.20 தொடர்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக்பாஸ் லீக் தொடர் அடுத்த சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான சிட்னி தண்டர் அணியில் விளையாட இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும் 2018, 2019ம் ஆண்டிற்கான தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்.
ஐ.பி.எல் தொடரில் விளையாட தடை;
சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஜோ ரூட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அதே வேளையில், 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஜோ ரூட் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாட கூடாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
சொல்லப்போனால் ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணிக்கும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சென்ற வருட காலத்தில் அவர் எந்த அணியினாலும் ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் . மேலும் அடுத்த வருட ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் 20 ஓவர் லீக்கில் விளையாட அவருக்கு அனுமதி அளித்துள்ளது. பின்னர் 2019 உலகக்கோப்பை அடுத்து ஐபிஎல் தொடரில் ஆடுவதை பற்றி பார்த்துக் கொள்ளலாம் எனவும் அவருக்கு கூறுகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.