முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகல்

MELBOURNE, AUSTRALIA - DECEMBER 24: Coach Trevor Bayliss (R) and Joe Root talk during an England nets session at the Melbourne Cricket Ground on December 24, 2017 in Melbourne, Australia. (Photo by Michael Dodge/Getty Images)

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையொட்டி தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. வரும் 26-ந்தேதி அடிலெய்டில் 4-வது போட்டியும், 28-ந்தேதி பெர்த்தில் 5-வது போட்டியும் நடக்கிறது.

அதன்பின் 7-ந்தேதி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 18-ந்தேதி வரை நடக்கிறது.

Joe Root kicks the boundary rope after falling for 67, Australia v England, 2nd Test, Adelaide, December 6, 2017

இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் விலகியுள்ளார். ஆனால் பிப்ரவரி 25-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘எல்லா போட்டிகளிலும் விளையாடுவதற்காகவே நான் இங்கு வந்தேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். கிரிக்கெட் ஆட்டத்தை தவற விடுவதை நான் விரும்பவில்லை. நான் விலகுவது குறித்து பயிற்சியாளரிடம் பேசினேன். இந்த சீசனில் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. இது ஒரு சிறிய இடைவேளிதான்’’ என்றார்.

Editor:

This website uses cookies.