அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேள்! ஜாப்ரா ஆர்ச்சருக்கு கட்டளையிட்ட முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது இதில் முதல் போட்டி இங்கிலாந்திடம் நகரில் உள்ள சவுத்தம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பின்னர் இங்கிலாந்து வீரர்கள் நேரடியாக இரண்டாவது போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் அதை செய்யவில்லை . அவர் நேரடியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற பின்னர் தனது காதலியுடன் இருந்துள்ளார். அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மான்செஸ்டர் மைதானத்திற்கு வந்துள்ளார். இதனைக்கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பத்து நாள் தனிமைப்படுத்த தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். இந்த பத்து நாட்களுக்குள் அவர் இரண்டு முறை கொரோனா வைரஸ் இல்லை என்று சான்றிதழ் பெற வேண்டும்,
இப்படிச் செய்து தன் அனி வீரர்களையும் எதிரணி வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களையும் அவர் ஆபத்தில் தள்ளியுள்ளார். மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கிட்டத்தட்ட பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். அதாவது வெஸ்ட்இண்டீஸ் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.