டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா இடது-கை வேக பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன், 1427 நாட்களுக்கு பிறகு ஐபில்-இல் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடுகிறார்.
தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான ஐபில் தொடர் 10 வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் 25வது லீக் போட்டியில் மும்பையில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி தலைவர் ஜாகீர் கான், பந்து வீச முடிவெடுத்தார். டெல்லி அணியில் ஜெயந்த் யாதவ், மாத்யூஸ், பில்லிங்ஸ் நீக்கப்பட்டு ரபாடா, ஆதித்யா தாரே சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் காயம் காரணமாக மலிங்க விளையாடவில்லை, அவருக்கு பதிலாக மிட்சல் ஜான்சனை சேர்த்தனர்.
இதனால் இவர் 1427 நாட்களுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடுகிறார். கடைசியாக இவர் மும்பைக்காக 2013-இல் விளையாடினார். 2014, 2015, 2016-வது ஐபில் சீசனில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடினார் என குறிப்பிடத்தக்கது.