இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாப்ரி பய்காட் இங்கிலாந்து அணியின் தேர்வாளர் எட் ஸ்மித் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
.
சமீபமாகஇலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜானி பெய்ஸ்டவ் மிகச்சிறப்பக செயல்பட்டு 47,35*,28,29 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணிக்குஉதவினார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட ஜானி பெய்ஸ்டவ் மூன்றாம் மற்றும் நான்காம் போட்டியில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பைகாட் கூறியதாவது ,பட்லருக்கு பதில் பெய்ஸ்டோவை இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறக்கி இருக்க வேண்டும் என்று கூறினார்,
அவரை களமிறக்காதது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று கூறினார்,இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜானி பெய்ஸ்ட்ரோ தான் களமிறக்க வேண்டும் அவருக்கு ஓய்வு தேவை இல்லை இந்த நிலையிலும் இங்கிலாந்து அணியின் தேர்வாளர் எட்ஸ்மித் ஜானியை வேண்டுமென்றே வாய்ப்புகள் அளிக்காமல் தவிர்க்கிறார் என்று கூறினார்.
ஐபிஎல்லில் அதிகமான போட்டிகள் விளையாண்டு இந்திய மைதானத்தில் அனுபவம் பெற்றிருக்கும் ஜானி இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டியில் களமிறங்காதது அந்த அணிக்கு பின்னடை தவிர வேறொன்றுமில்லை, இவ்வாறு அவரை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இழக்காத அதற்கு அந்த அணி வெட்கப்பட வேண்டும் என்று கூறினார்.